சனி, 26 அக்டோபர், 2013

குண்டலினி தியானம். பதிவு 6

பதிவு 1ல் இருந்து பார்த்தால் மட்டுமே சரியாக புரிந்துகொள்ள முடியும்.
தயவு செய்து பதிவு 1ல் இருந்து பார்க்கவும்.


இப்பொது நாம், நம் உடலில் இந்த வாத, பித்த, கபம் ஆகியவற்றில் எதன் தாக்கத்தில் இருக்கின்றோம், என்று பார்ப்போம். இதை அறிவதற்கு நாம் முதலில் ஒரு சித்தமருத்துவரை நாடி நம் தேகத்தில் எதன் தாக்கம் உள்ளது என்று அறியவேண்டும். 

அப்படி வசதிகள் இல்லாதவர்கள். உங்களின் இடதுகையில் உள்ள மோதிரவிரல், நடுவிரல், மற்றும் ஆட்காட்டி விரலை, உங்களின் வலது கையின் மணிக்கட்டில் ,  பெருவிரலுக்கு கீழ் நாடி பார்க்கும் இடத்தில் வைத்து, அந்த விரல்களின் நுனிப்பகுதியை, ஒவ்வொரு விரலுக்கும் சிறு இடைவெளி விட்டு வைத்து மெதுவாக அழுத்தவும். இப்படி அழுத்தும் பொது , உங்களின் விரல்களின் நுனியில் நாடித்துடிப்பை உணரமுடியும். இதேபோன்று மூன்று முறை செய்து எந்த விரல்நுனியில் துடிப்பை உணர்கின்றீர்கள் என்று உறுதி செய்துகொள்ளுங்கள். 

இந்த நாடித்துடிப்பு மோதிரவிரலில் இருந்தால் உங்கள் உடலில் இப்போது வாயுவின் ஆதிக்கம் அதிகம் உள்ளது.

நடுவிரலில் துடிப்பு இருந்தால் பித்தத்தின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. 

ஆட்காட்டி விரலில் துடிப்பு இருந்தால் கபத்தின் ஆதிக்கம் அதிகம் உள்ளது.

இப்பொது நாம், இந்த மூன்றில் எத்தன தாக்கம் அதிகம் இருந்தால் என்ன உணவு மற்றும் மருந்து சாப்பிடவேண்டும் என்று மருத்துவரிடம் கேட்டு அதை பின் பற்றுவோம்.

அத்துடன் நாமும் சில வழிகளை சொல்கின்றோம்.
பதிவு 7இல் பார்க்கவும்  

குண்டலினி தியானம். பதிவு 5.

பதிவு 1ல் இருந்து பார்த்தால் மட்டுமே சரியாக புரிந்துகொள்ள முடியும்.
தயவு செய்து பதிவு 1ல் இருந்து பார்க்கவும்.


இந்த குண்டலினி தியானத்தின் வேறு ஒரு தோற்றமே நம் அம்மன் கோவில்களில் பவர்ணமி பூஜை அல்லது ஸ்ரீ சக்கர பூஜை. 
இதை ஸ்ரீ சக்ர பூஜையின் வேறு ஒரு தோற்றமே குண்டலினி தியானம் என்றும் சொல்லலாம்.

நம்மில் பலர் குடும்பப்பொறுப்புகள் அனைத்தையும் முடித்த பின் அல்லது குடும்பவாழ்க்கையில் வெறுப்பு வந்தபின் தான் தியானம், மற்றும் மன அமைதி , மற்றும் ஆன்மீக நாட்டம் கொள்கின்றோம். 

ஆனால் இந்த வயதில் நம் உடலை நாம் பலவகைகளில் பழுதாக்கி வைத்து விட்டு இப்போது இந்த சக்ர தியானம் பற்றி தேடி முயற்சி செய்யும் பொது. குண்டலினி சக்தியின் தாக்கத்தால் நம் உடலில் வாதம் கூடினால் அல்லது நம் உடலில் வாதம் அதிகமாக இருந்தால், இந்த வாயுவின் தாக்கம் மிகப்பெரிய இரசாயன மாற்றத்தை நம்மில் ஏற்ப்படுத்தும், அதன் விளைவாக இரத்தக்கொதிப்பு , மாரடைப்பு, இன்னும் பல ஆபத்தான நோய்கள் வாயுவின் தாக்கத்தால் ஏற்ப்படும். 

 இதேபோல் இந்த சக்ர தியானத்தின் பொது பித்தம் அதிகம் உள்ளவர்கள், மூளைக்கு செல்லும் நரம்புகளில் அழுத்தத்தை ஏற்ப்படுத்தி அல்லது அடைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் நம் மூளை செயல் இழப்பது, பாரிச வாதம் எனும் கை, கால் , வாய், இழுத்துக்கொள்ளுதல் ,போன்றவை ஏற்ப்பட வைப்பு உள்ளது. கபம் அதிகம் ஆகும் போதும் மிக ஆபத்தான நிலைக்கு நாம் தள்ளப்படுகின்றோம்.

இதற்க்கு நம் சித்தர்களும் ரிஷிகளும் கண்ட பல வழிகளில் ஒன்று தான் நம் நாடியை பிடித்து பார்த்து அதன் மூலம் நம் உடல் எந்த தேகமாக இருக்கின்றது என்று தெரிந்து, அதற்கு ஏற்றார்போல , பித்ததேகம் என்றால் அதற்கு உரிய உணவையும் மருந்தையும் கொடுத்து பித்தத்தை குறைத்து நம் தேகத்தை சக்ரதியானத்திற்கு ஆயத்தப்படுத்துதின்றார்கள். இதுபோன்ற சிகிச்சை மூலமே தற்போது பல குரு மகான்களும் தம் மாணவர்களை ஆயத்தபடுத்தி பின் பயிற்சி அளிக்கின்றனர்.

இப்பொது நாம் இந்த வாத பித்த கபத்தையும் அதில் எது நம் உடலில் அதிக அளவு இருக்கின்றது , என்பதையும், அதை எப்படி சரிசெய்வது என்பதையும் பதிவு ஆறில்  பார்ப்போம்.

வெள்ளி, 25 அக்டோபர், 2013

குண்டலினி தியானம். பதிவு 4.

பதிவு 1ல் இருந்து பார்த்தால் மட்டுமே சரியாக புரிந்துகொள்ள முடியும்.
தயவு செய்து பதிவு 1ல் இருந்து பார்க்கவும்.

காரணம் நம் தேகம் பஞ்ச பூதங்கள், தசவாயுக்கள்,வாத,பித்த, கபம், இன்னும் பலவற்றை கொண்டு அற்புதமாக இயங்கிக்கொண்டிருன்க்கின்றது.

இதை நாம் இக்கால தவறான உணவுபலக்கங்களாலும், ஒழுங்கன்ற வாழ்க்கை முறைகளாலும் மிகவும் பழுதாக்கி உள்ளோம்.

இந்த சக்ர தியானம், பொதுவாக 30 வயதுக்கு மேற்ப்பட்டவர்கள் செய்யும் பொது. இந்த வாத பித்த கபம் மற்றும் பஞ்சபூதங்களின், செயல்பாடுகள் சரி இல்லாத ஒருவர் குருவின் வழிகாட்டல் இல்லாமல் செய்யும் பொது. மிக ஆபத்தான ஒரு நிலை ஏற்ப்படுகின்றது.

அதாவது மாரடைப்பு, கழுத்தில் இரத்தகுழாய் அடைப்பு, மூளையின் செயல் இழப்பு, என்று மிகவும் ஆபத்தான நிலை ஏற்ப்படுகின்றது.

ஆகவே தான் நம் முனோர்கள் நம் உடலின் அனைத்து செயல்களையும் அறிந்து அதற்க்கு ஏற்ப, சிறு வயதிலேயே 12 அல்லது 13 வயதுகளில் இந்த சக்ர தியானத்தை குருகுலத்தில் சொல்லிகொடுத்து, அதன் பின் இல்லறவாழ்க்கைக்கு அனுப்பினர்.

வயது கூடியவர்கள் எப்படி செய்யவேண்டும் என்பதற்கும் அவர்கள் வழிகளை கண்டு, அதை நமக்கு விட்டுச் சென்றுள்ளனர்.

அவற்றை நம் பதிவு 5ல் பார்ப்போம்.

குண்டலினி தியானம். பதிவு 3.

குண்டலினி தியானம். பதிவு 3.

இந்த பதிவை, முதல் பதிவிலிருந்து படித்து அறிவதே சால சிறந்தது.

இப்படியான சிலிர்ப்பு ஏன் நமக்குத்தொன்றுகின்றது என்றால். நம் முதுகெலும்பின் கீழ் பாகத்தில் உறங்கும் இந்த சக்தி இந்த ஐந்து இந்திரியங்களின் மூலம் தூண்டப்படுகின்றது. அப்போது மின்காந்த சக்தியானது  மிக மெல்லிய அளவில் ,ஒரு மின்னல் போல் நம் உடலில் பாய்கின்றது.

இது முறையே முதுகெலும்பு நுனியில் இருந்து, மூலாதாரசக்கரம் பின் ச்வதிஷ்ட்டானம், மணிப்பூரகம், அநாதகம், விசுக்தி, ஆக்ஞேயம் வரை செல்லும். பல நேரங்களில் இந்த சக்தி முதல் இரண்டு சக்கரம் வரை சென்று திரும்புகின்றது.

நாம் தொடர்ந்து தியானம் செய்வதாலும், மற்றும் பஞ்ச இந்திரியங்கள் மூலமாகவும் தொடர்ந்து நம் உடலில் பாயச்செய்வது மிகவும் சிரமம்.

இதற்கு நம் மகான்கள் கண்ட பல நல்ல வழிகளில் குண்டலினி தீக்ஷை மற்றும் குண்டலினி தியானம். இதை சகர தியானம் என்றும் சொல்லுவர்.

இது குருவின் அருளோடு குருவின் மூலமாக பயில்வது மட்டுமே மிக சிறந்த முறை.

காரணம்.

பதிவு 4ல் பார்க்க... 

குண்டலினி தியானம். 2

அதை குண்டலினி சக்தி பஞ்ச இந்த்ரியங்களின் மூலம் செய்கின்றது.

உதாரணமாக.

1. கண்.   
தெய்வ திருவுருவம், இயற்க்கை, ஆடல் கலை, சிர்ப்பகலை, மேலும் பலவற்றை கண்ணால் காணும் பொது நம் உடல் சிலிர்க்கின்றது.

2. காது.

தெய்வீகபாடல்கள் ,  சத்தியத்தைகேட்கும்போது, மந்திர உச்சாடனம், இசைக்கருவுயில் புலமை பெற்றவர் அதை இயக்கி வரும் சப்தத்தில், என்று பலவிடயங்களை கேட்கும்போது நம் உடல் சிலிர்க்கும்.

3. மூக்கு. 

நறுமணம், யாக புகை, நெய் விளக்கு வாசம், போன்ற பலவற்றை நுகர்வதில் உடல் சிலிர்ப்பது உண்டு.

4. நாக்கு.

அருமையான உணவு, உடலுக்கும் மனதுக்கும் இதமான ருசியான உணவு அதுவும் மிகவும் அன்பானவர்கள் கையால், அன்புடன் பரிமாறப்படும்பொது.
உடல் சிலிர்க்கின்றது.

5.தோல்.

கோயில்கள், ஆன்மீக பெரியோர்களின் ஆச்சிரமங்கள், புனிதமான இடங்கள், புனிதமான யாகம் போன்ற நடக்கும் இடம், குருவருளால் நாம் தொடப்படும் பொது, ஆசீர்வாதம் பெரும் பொது, போன்ற பல செயல்களால் நம் உடலில் படுகின்ற உணர்வுகளால் நம்மில் உடல் சிலிர்க்கின்றது.

இப்பொழுது உங்களுக்கு அப்படி நடந்திருக்கின்றதா என்று யோசித்துப்பாருங்கள்.


உங்களுக்கு எப்பொழுதாவது கோயிலுக்கு சென்றபோதோ, கோயிலில் இருக்கும்போது, வீட்டில் சுவாமி கும்பிடும்போது, தெய்விக பாடல் கேட்கும் பொது, மந்திரம் கேட்கும் பொது, இது போன்ற ஏதாவது ஒரு தருணத்தில் மனதில் பதியும் படி,உடல் சிலிர்த்தது உண்டாகி இருக்கின்றதா.


ஆம் என்றால்  


தொடரும்... 

குண்டலினி தியானம்.

குண்டலினி தியானம் பதிவு 1.

பரம்பொருளின் தர்மம். தன்னிலிருந்து அனைத்தும் தோன்றி அவை தன்னில் வந்து கலப்பதேயாகும்.

அப்படி தோன்றிய நாம் அந்த பேரானந்த பெரும்ஜோதியில் கலப்பதற்கு. சில தெளிவு தேவை.ஆகவே முதலில் தெளிவு, பிறகு, பயிற்சி.

நம் உடல் நமக்கு ஒரு உடலாக தெரிந்தாலும், உண்மையில் நமக்கு 5 உடல்கள் உண்டு, இவை பஞ்ச கோசம் எனப்படுகின்றது. 

அதாவது உணவால், மனத்தால், பிராணத்தால், பேரறிவால், பேராநந்தத்தால், என 5 வகை தேகம் பிரிக்கப்பட்டுள்ளது. 

உணவால் உருவான தேகத்தை தவிர மற்ற தேகத்தை சராசரி மனிதரால்  பார்க்க முடியாது, உணரமட்டுமே முடியும், அதுவும் அனைவருக்கும் சாத்தியம் இல்லாத விடயம்.

 நம் சூட்சம  உடல் இயங்க பிராணசக்தி, உயிர் சக்தி, மின்காந்த சக்தி, நமது கர்ம வினை இவை நான்கும் தேவை.

இதில் முதல் மூன்றின் கலவையில் மிக சிறிய அளவு, நம் முதுகெலும்பின் அடிப்பாகத்தில் உள்ள குடம் போன்ற பகுதியில் உறங்கிக்கொண்டிருக்கின்றது. இந்த சக்திக்கு எதையும் உருவாக்கும் சக்தி உண்டு, இந்த சக்தியின் உதவியால் நம் உடலின் அனைத்து பாகங்களுக்கும் சக்தியை பரப்புவதற்கு 70 000 த்திற்கும் மேலான சக்தி தளங்கள் அமைத்துள்ளன. 

அவற்றில் மிக மிக அத்தியாவசியமானதாக 7 சக்தி தளங்கள் உள்ளது. இதை நம் முன்னோர்கள், தாமரைகலாகவும், சக்தியை சுழற்றிக்கொடுக்கின்ற சக்கரங்களாகவும் விவரிக்கின்றனர். அந்த 7 சகரங்களும் பின்வருமாறு.

1 மூலாதாரம். இது ஆசன துவாரத்திற்கும் சல துவாரத்திற்கும் நடுவில் உள்ளது.


2 ஸ்வாதிஷ்டானம் . இது இனப்பெருக்க உறுப்புக்கு 1 அங்குலத்திற்கு மேல் உள்ளது.


3 மணிப்பூரகம்  இது தொப்புளுக்கு அரை அங்குலத்திற்கு மேல் உள்ளது.


4. அனாகதம். இது இதயத்திற்கு வலது புறம் அதாவது நடுமார்பில் உள்ளது.


5. விசுக்க்தி . இது தொண்டைக்குழிக்கு சிறிது மேலே உள்ளது.


6. ஆக்ஞேயம் . இது நம் புருவங்களுக்கு மத்தியில் உள்ளது. இதை மூன்றாவது கண் என்றும் சொல்லலாம். காரணம் இதில் தொடர்ந்து தியானிப்பவர், கண்கள் மூடி இருக்கும் போதே அனைத்தையும் பார்க்க முடியும்.


7. சஹஸ்ராரம். இது உச்சந்தலையில் உள்ளது.  


இந்த சகரங்களின் உதவியுடன் சக்தி ஓட்டத்தை அதிகப்படுத்தி, அதன் மூலம் நம் சூக்சும உடலை வலுவாக்கி, சக்தியை பரிபூரணமாக உணர்ந்து, அந்த ஆதி சக்தியின் உதவியால் பரம்பொருளை உணர்ந்து பரம்ஜோதியில் கலக்கலாம்.

இதன் மூலம் இனி பிறப்பென்பது இல்லாபேரின்பத்தை அடையலாம்.

இந்த குண்டலினி சக்தியை நம் முன்னோர்கள் பெண் சக்தியாகவும். பேரானந்தத்தை ஆண் சக்தியாகவும் வருநித்திருப்பதாக அடியேன் உணருகின்றோம்.


நம் உடலில் எப்பொழுதெல்லாம் சக்திதேக்கங்கள் ஏற்படுகின்றதோ அப்பொழுதெல்லாம் நம் உடலில் சில நோய் தோன்றுகின்றன.


இந்த நோய்கள் எந்த சக்கரத்தின் பகுதியில் சக்திதேக்கம் உள்ளதோ அதற்கு அருகில் உள்ள உடல் உறுப்புக்களிலும் அந்த உறுப்பு தொடர்பான பகுதியிலும் நோய் உண்டாகின்றது. இதை சரி செய்ய நாம் நம் உடலில் சக்தி ஓட்டம் எப்பொழுதும் சீராக இருக்க பார்த்துக்கொள்ளவேண்டும்.


அதற்கு நம் குண்டலினி சக்தியும் நம்மை அறியாமலே அவ்வப்போது நம் உடலில் மின்காந்த சக்தியை பரவசெய்வது உண்டு,  


மின்காந்த சக்தியை எப்படி பரவசெய்கின்றது என்று எப்படி தெரிந்துகொள்வது?

இது நம் உடலில் ஏற்ப்படுகின்ற சிலிர்ப்பின் மூலம், அதாவது புல்லரிப்பு மூலம் தெரிந்துகொள்ளலாம்.

தொடரும்...