குண்டலினி தியானம் பதிவு 1.
பரம்பொருளின் தர்மம். தன்னிலிருந்து அனைத்தும் தோன்றி அவை தன்னில் வந்து கலப்பதேயாகும்.
அப்படி தோன்றிய நாம் அந்த பேரானந்த பெரும்ஜோதியில் கலப்பதற்கு. சில தெளிவு தேவை.ஆகவே முதலில் தெளிவு, பிறகு, பயிற்சி.
நம் உடல் நமக்கு ஒரு உடலாக தெரிந்தாலும், உண்மையில் நமக்கு 5 உடல்கள் உண்டு, இவை பஞ்ச கோசம் எனப்படுகின்றது.
அதாவது உணவால், மனத்தால், பிராணத்தால், பேரறிவால், பேராநந்தத்தால், என 5 வகை தேகம் பிரிக்கப்பட்டுள்ளது.
உணவால் உருவான தேகத்தை தவிர மற்ற தேகத்தை சராசரி மனிதரால் பார்க்க முடியாது, உணரமட்டுமே முடியும், அதுவும் அனைவருக்கும் சாத்தியம் இல்லாத விடயம்.
நம் சூட்சம உடல் இயங்க பிராணசக்தி, உயிர் சக்தி, மின்காந்த சக்தி, நமது கர்ம வினை இவை நான்கும் தேவை.
இதில் முதல் மூன்றின் கலவையில் மிக சிறிய அளவு, நம் முதுகெலும்பின் அடிப்பாகத்தில் உள்ள குடம் போன்ற பகுதியில் உறங்கிக்கொண்டிருக்கின்றது. இந்த சக்திக்கு எதையும் உருவாக்கும் சக்தி உண்டு, இந்த சக்தியின் உதவியால் நம் உடலின் அனைத்து பாகங்களுக்கும் சக்தியை பரப்புவதற்கு 70 000 த்திற்கும் மேலான சக்தி தளங்கள் அமைத்துள்ளன.
அவற்றில் மிக மிக அத்தியாவசியமானதாக 7 சக்தி தளங்கள் உள்ளது. இதை நம் முன்னோர்கள், தாமரைகலாகவும், சக்தியை சுழற்றிக்கொடுக்கின்ற சக்கரங்களாகவும் விவரிக்கின்றனர். அந்த 7 சகரங்களும் பின்வருமாறு.
1 மூலாதாரம். இது ஆசன துவாரத்திற்கும் சல துவாரத்திற்கும் நடுவில் உள்ளது.
2 ஸ்வாதிஷ்டானம் . இது இனப்பெருக்க உறுப்புக்கு 1 அங்குலத்திற்கு மேல் உள்ளது.
3 மணிப்பூரகம் இது தொப்புளுக்கு அரை அங்குலத்திற்கு மேல் உள்ளது.
4. அனாகதம். இது இதயத்திற்கு வலது புறம் அதாவது நடுமார்பில் உள்ளது.
5. விசுக்க்தி . இது தொண்டைக்குழிக்கு சிறிது மேலே உள்ளது.
6. ஆக்ஞேயம் . இது நம் புருவங்களுக்கு மத்தியில் உள்ளது. இதை மூன்றாவது கண் என்றும் சொல்லலாம். காரணம் இதில் தொடர்ந்து தியானிப்பவர், கண்கள் மூடி இருக்கும் போதே அனைத்தையும் பார்க்க முடியும்.
7. சஹஸ்ராரம். இது உச்சந்தலையில் உள்ளது.
இந்த சகரங்களின் உதவியுடன் சக்தி ஓட்டத்தை அதிகப்படுத்தி, அதன் மூலம் நம் சூக்சும உடலை வலுவாக்கி, சக்தியை பரிபூரணமாக உணர்ந்து, அந்த ஆதி சக்தியின் உதவியால் பரம்பொருளை உணர்ந்து பரம்ஜோதியில் கலக்கலாம்.
இதன் மூலம் இனி பிறப்பென்பது இல்லாபேரின்பத்தை அடையலாம்.
இந்த குண்டலினி சக்தியை நம் முன்னோர்கள் பெண் சக்தியாகவும். பேரானந்தத்தை ஆண் சக்தியாகவும் வருநித்திருப்பதாக அடியேன் உணருகின்றோம்.
நம் உடலில் எப்பொழுதெல்லாம் சக்திதேக்கங்கள் ஏற்படுகின்றதோ அப்பொழுதெல்லாம் நம் உடலில் சில நோய் தோன்றுகின்றன.
இந்த நோய்கள் எந்த சக்கரத்தின் பகுதியில் சக்திதேக்கம் உள்ளதோ அதற்கு அருகில் உள்ள உடல் உறுப்புக்களிலும் அந்த உறுப்பு தொடர்பான பகுதியிலும் நோய் உண்டாகின்றது. இதை சரி செய்ய நாம் நம் உடலில் சக்தி ஓட்டம் எப்பொழுதும் சீராக இருக்க பார்த்துக்கொள்ளவேண்டும்.
அதற்கு நம் குண்டலினி சக்தியும் நம்மை அறியாமலே அவ்வப்போது நம் உடலில் மின்காந்த சக்தியை பரவசெய்வது உண்டு,
மின்காந்த சக்தியை எப்படி பரவசெய்கின்றது என்று எப்படி தெரிந்துகொள்வது?
இது நம் உடலில் ஏற்ப்படுகின்ற சிலிர்ப்பின் மூலம், அதாவது புல்லரிப்பு மூலம் தெரிந்துகொள்ளலாம்.
தொடரும்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக