புதன், 20 நவம்பர், 2013

குண்டலினி தியானம். பதிவு 11

குண்டலினி தியானம். பதிவு 11

தயவு செய்து பதிவு 1ல் இருந்து படிக்கவும்.


நாம் பின் ஒருமுறை ஸ்ரீ சக்கரத்தின் மகத்துவம், அதன் அமைப்பு, அதன் தத்துவம், ஸ்ரீ சக்கரத்தை  ஆராதிப்பதால் ஏற்படும் பலாபலன்கள் பற்றி விளக்கமாக விவரிக்கின்றோம். 






நாம் இப்போது இந்த நிறங்களுக்கும் நம் சக்தி தளங்களில் உள்ள ஸ்ரீ சக்கரம் அல்லது ஸ்ரீ மஹா மேருவுக்கும் செய்யப்படும் பூசைக்கும் அல்லது பவர்ணமி பூசைக்கும் ( இவை அனைத்தும் ஒரு பூசையே குறிக்கும்.) உள்ள தொடர்பை மிக மிக மேலோட்டமாக பார்ப்போம்.

இந்த ஸ்ரீ சக்கரபூசை ஒவ்வொரு பவர்ணமி தினத்தின் மாலையில் சந்திரோதயத்தின் பொது செய்யப்படுகின்றது. இந்த ஸ்ரீ சக்கரம் இது ஒன்பது அடுக்குகளை உடையது .பதினாறு சூட்சும தேகம் உடைய தேவதைகள் இருப்பதும்,  இந்த ஒன்பது அடுக்குகளிலும் பிரதானமாக ஒன்பது தேவதைகள் ஆட்சி செய்கின்றனர். இவர்கள் ஒன்பது நிறங்களை உடையவர்கள், இதன் அடிப்படையிலேயே நவராத்திரியும் கொண்டாடப்படுகின்றது. இவர்களுக்கு தனித்தனி சக்திகள் உள்ளது. இவர்களின் முழு பெருமையையும் நாம் பிறகு ஒரு தருணத்தில் பார்ப்போம். 

இந்த பூசையின் பொது ஒன்பது நிற பூக்கள், ஒன்பது நிற பட்டு, ஒன்பது வகை பழங்கள், என்று மிக சிறப்பாக ஒன்பது தேவியருக்கும் ஒன்பது வித பூசை இந்த பவர்ணமி இரவு நடை பெரும். 

ஏன் பவர்ணமி அன்று மட்டும் செய்யவேண்டும்? வேறுநாட்களில் செய்யக்கூடாதா?
நம் மன நிலைக்கும் சந்திரனுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதை பல ஆராய்ச்சிகள் அறிவியல் பூர்வமாக பலமுறை நிரூபித்திருக்கின்றார்கள். மேலும் சந்திரனின் தாக்கத்தால் இயற்கையும் பல மாற்றங்களை மேற்கொள்வதும் எமக்கு தெரிந்ததே. உதாரணமாக குறிப்பாக கடல் கொந்தளிப்பு. மீனவர்கள் அமாவசை அன்று கடல் கொந்தளிப்பு அதிகம் இருக்கும் என்பதால் கடலுக்கு செல்வதை தவிர்ப்பதை நாம் அறிவோம்.

இந்த பூமியில் 73 சதவிகிதம் நீர் இருப்பது போல் நம் உடலிலும் நீர் தான் அதிக அளவில் உள்ளது.  பவர்ணமி அன்று நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர்வதை  நாம் படித்ததுண்டு. அது போல் நம் உடலில் உள்ள நீர் பல மாற்றங்களை பெறுகின்றன, குறிப்பாக வாத பித்த கபம். நம் உடல் மற்றும் மன நிலையை பாதிக்கின்றது. 

இந்த நேரத்தில் கிரகங்களின் கதிர் வீச்சு பூமியில் அதிகமாக விழும் அதற்கும் சந்திரனே  நடுநிலை வகித்து , கதிர் வீச்சை பூமியை நோக்கி செலுத்துகின்றது. 

இந்த நேரத்தில் செய்யப்படும் பூசையில் கோவிலில் இருப்பவர்களின் ஒவ்வொரு சக்கரங்களும் குண்டலினி சக்தியின் மூலம் தூண்டப்பட்டு சிலர் சக்தியின் உச்சத்தை அடைவதை பார்க்ககூடியதாக உள்ளது.

இந்நிலையில் அது நம் மனித குலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல்  அந்த கதிர்வீச்சை சரியான முறையில்  நம் உடலில் உள்ள சக்தி மையங்களை மேலும் வலுவடைய செய்து  அதன் மூலம் நம் வாழ்வையும்  மனதையும் சீரமைத்து ,  குண்டலினி சக்தி மூலம் பரிபூரண சக்தியை உணர்ந்து, சக்தி உச்சத்தை உணர்ந்து பின் சிவத்தை அடைய மிக மிக நுணுக்கமான வகையில் இந்த பூசையும் வழிமுறைகளும்  நம் முன்னோர்கள் மிக அறிவுபூர்வமாகவும் தத்துவார்த்தமாகவும்  அமைத்துள்ளனர்.

மிகுதியை பதிவு 11 இல் பார்ப்போம்.