குண்டலினி தியானம். பதிவு 18
அன்பர்கள் முதல் பதிவிலிருந்து வாசிப்பதே முழுமையான தெளிவைத்தரும்.
அனைத்து பதிவுகளையும் வாசிக்க :
http://blissfulllight.blogspot.ca/2013/10/blog-post_25.html
அனைத்து பதிவுகளையும் வாசிக்க :
http://blissfulllight.blogspot.ca/2013/10/blog-post_25.html
இந்த சக்தி உடல்கள் இயங்க நமக்கு உயிர்சக்தி சீராக நம் உடலில் பரவவேண்டும், அதற்கு நம் உடலில் நாடிகள் உள்ளன, இந்த நாடிகளே பிரதானமாக இருந்து உயிர்சக்தியை சகரங்களின் துணையுடன் உடல் முழுதும் சீராக கொண்டு செல்கின்றது. வேதங்களில் நம்முள் பல லட்சம் நாடிகள் இருப்பதாகவும், அதில் சில பிரதானமனதாகவும், சில அதன் துணை நாடிகலாகவும், பல சிறு நாடிகலாகவும் சொல்லப்படுகின்றது. இதில் அனைவரும் அறிந்ததாக சொல்லப்படுவது 72.000 நாடிகள், இதில் பிரதான மான நாடிகள் 3. இந்த இந்த நாடிகள் இடகலை, பிங்கலை, சுழுமுனை என்று அழைக்கப்படுகின்றது.
சுழுமுனை.
நமது உடலில் அதி பிரதானமானதாக சொல்லப்படுவது இந்த சுழுமுனை நாடி. இதை சுசும்னா நாடி என்றும் சொல்வதுண்டு. நம் உடலில் இருக்கும் அனைத்து நாடிகளுக்கும் ஆதாரமாக இருப்பதே இந்த சுஷும்னா நாடிதான்.
இது நமது முதுகு தண்டின் நுனிப்பகுதியில் துவங்கி, நமது உச்சந்தலையில் முடிகின்றது.இந்த நாடி நம் உடலுக்கு தேவையான உயிர்சக்தியை 7 சக்கரங்கள் மூலமாக உடல் முழுவதும் மற்ற நாடிகளின் உதவியுடனும் கொண்டு செல்கின்றது. இது தவிர இந்த சுஷும்னா நாடியின் மிக முக்கியமான வேலை, நம் முதுகு தண்டின் கீழ் நுனியில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் குண்டலினி சக்தி என்னும் அதி உயர்ந்த சக்தியை, முதுகுத்தண்டின் வழியாக நம் உடல் முழுவதும் பரவசெய்கின்றது.
சாதாரண மனிதர்களுக்கு மிக மிக குறைந்த அளவு குண்டலினி சக்தியே உடலில் பரவுகின்றது. அதிக பக்தி, யோகாசனம், தியானம், பரதம், பக்தி மற்றும் சங்கீதம் பாடுபவர்கள், போன்ற சாதகங்களை தொடர்ந்து செய்வதால் குண்டலினி சக்தி தட்டி எழுப்பப்பட்டு அதிக அளவு சுளுமுனைனாடியின் மூலம் பாய்கின்றது. இவ்வாறு பாயும் குண்டலினி சக்தி நம் உடலில் உள்ள சகரங்களை வேகமாக சுழலசெய்து பிரபஞ்ச சக்தியை உள்ளிழுத்து நம் உடல் முழுதும் பாயசெய்து நம் உடல் பரிபூரண ஆரோக்யமும், இளமையும் பெறுவதோடு, நாம் விரும்பும் பேரானந்தத்தையும் அளிக்கின்றது.
இந்த குண்டலினி சக்தி எங்கு உள்ளது அது பற்றிய அதிசயத்தக்க சில விடயங்களை பதிவு 19 இல் பார்ப்போம்.










