வெள்ளி, 8 நவம்பர், 2013

குண்டலினி தியானம். பதிவு 10

குண்டலினி தியானம். பதிவு 10

தயவு செய்து பதிவு 1ல் இருந்து படிக்கவும்.

நம் உடலில் உள்ள சக்கரங்களின் நிறங்களுக்கும் வானவில்லின் நிறங்களுக்கும் தொடர்பு உள்ளதற்கு காரணம். இந்த அண்டவெளியில் இருக்கும் கிரகங்களே. அந்த கிரகங்களில் இருந்து வெளிப்படும் ஒளிக்கதிர்களே அண்டமெங்கும் பரவிக்கிடந்தது, அதன் ஆளுமையால் இங்கு உருவாகும் அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான் பிராணசக்தி, மின்காந்தசக்தி போன்றவற்றை கொடுக்கின்றது.

இந்த சக்தி ஓட்டத்தின் பயன்களை சரியாக புரிந்து அதை நாம் எப்படி உள்வாங்கி பலனடையவேண்டும் என்பதை, நம் மகான்கள் கண்டு அதற்கு பலவிதமான  வழிகளையும் யுக்திகளையும் கையாண்டு, மிக நுணுக்கமான விடயங்களை மறைமுகனாகவும் சிலவற்றை வெளிப்படையாகவும் செய்துள்ளனர்.

அவற்றில் சிலவற்றைப்பார்ப்போம்.

கோவில் வழிபாடு.
இது பல லட்சம் தத்துவங்களை உள்ளடக்கியது இப்போது  
சிலவற்றை மட்டும்  பாப்போம். அதில் நவக்கிரக வழிபாடு.

நாம் நம் கோவில்களில் உள்ள நவகிரகங்களின் வழிபாட்டின் போது அந்த கிரகாதிபதிகளுக்கு அணிவித்திருக்கும் ஆடைகளின் நிரத்தைபார்த்தால் தெரியும். நம் முனோர்கள் எவ்வளவு அறிவு தெளிவும், பூமியில் இருந்தே இந்த பிரபஞ்சத்தையும் அதன் அமைப்பையும் ஒரு கணப்பொழுதில் கணக்கிடும் ஆற்றல் பெற்றவர்கள் என்பது தெரியவரும்.

 


கிரகங்களின் நிறம் பார்ப்பதற்கு ஒரே நிறம் போல் தெரிந்தாலும் உண்மையில் அவை வெளியிடும் கதிர்கள் ஒவ்வொன்றும் நம் முனோர்கள் கோவில்களில் வைத்திருக்கும் விரகங்களுக்கு அணிவிக்கும் ஆடைகளின் நிரத்திளிருப்பதுதான் உண்மை. இது அந்த கிரகாதிபதிக்கு அணிவிக்கும் உடையில் மட்டும் முடிந்துவிடாமல். அந்த கிரகத்தின் கதிர்களை அந்தகோவிலில்  வந்து விழும்படி செய்வதற்கு ஒவ்வொருகிரகத்திற்கும் உரிய தானியம், இரத்தின கற்கள் , அதற்குரிய உலோகம், அதற்குரிய வடிவத்தை அந்துலோகத்தில் சரியாக பதிவுசெய்தல், அதற்குரிய மந்திரம் என்று மிகமிக நுட்பமாக பல லட்சம் விடயங்களை சேகரித்து அதனை வடிவமைத்து,மிக மிக சிறப்பாக செய்துள்ளனர்.

இதற்கு மிக சிறந்த சான்றே சமீபத்தில் அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் கூறியது அனைவரும் அறிந்ததே. 

சனிகிரகத்திலிருந்து  ஒரு மிக அடர்த்தியான நீலநிற கதிர் பூமியை நோக்கி வருவதையும், அது பூமியில் இந்தியாவில் உள்ள திருநள்ளாறு என்ற  மிகவும் பிரசித்திபெற்ற சனீஸ்வரனின் ஆலயத்தில் வந்து விழுவதாகவும் சொல்லி, இது எப்படி சாத்தியம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இப்பொழுது அவர்கள் கண்டு வியக்கும் இந்த அற்புதமான விடயத்தை நம் ஞானிகள் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே கண்டுபிடித்து அதில் பாண்டித்தியம் பெற்று விளங்குகின்றனர்.
ஆனால் நம்மில் பலர் நம் கோவில் வழிபாடு முறைகளை சிறிதும் அதன் மகத்துவம் தெரியாமல் தவறாக பேசுகின்றனர். 

ஆனால் நம் ஆலயங்களில் நடத்தப்படும் ஒவ்வொரு பூஜைக்கும் சம்பிரதாயத்திற்கும் பல லட்சம் காரணங்களும் பலன்களும் உண்டு. உண்மையை அறிவ விரும்புபவர்கள் தேடினால் கட்டாயம் கிடைக்கும். கிடைக்கின்றது.

அடுத்து நம் அம்மன் கோவில்களில் நடக்கும் பௌர்ணமி பூசை அல்லது ஸ்ரீ சக்கரபூசை பற்றி பதிவு 11 இல்  மேலோட்டமாக பார்ப்போம்.



குண்டலினி தியானம். பதிவு 9

தயவு செய்து பதிவு 1ல் இருந்து படிக்கவும்.

இப்பொழுது வானவில்லுக்கும் நம் சக்கரங்களுக்கும் எப்படி தொடர்பு என்பதை பார்ப்போம்.





இப்பொழுது இந்த படத்தை பார்க்கும் போது ஓரளவுக்கு உங்களுக்கு தொடர்பு இருப்பது தெரியும்.

சரி இப்போது, 
இந்த பிரபஞ்சம் எங்கும் நிரவிக்கிடக்கும் இந்த வண்ண விரிப்பை நம் சாதாரண கண்களால் பார்க்க முடிவதில்லை. ஆனால் இந்த பஞ்ச பூதங்களில் ஒன்றான தண்ணீர் , மழைத்துளிகளின் துகள்கள் மூலம் நம் கண்களுக்கு தெரியவைக்கின்றது. 

அது போல் நாம் ஆழ்நிலை தியானத்தின் மூலம் நம் உடலில் உள்ள இந்த நிறங்களை கண்களை மூடிய நிலையில் காண முடியும். இப்படி காண்பதால் என்னபயன். நம் மனம் ஒடுங்கும்போதே நமக்குள் இருக்கும் அந்த ஆதிசக்தியின் பல பிரமாண்ட சக்திகளை உணரமுடியும் அப்படி உணர்ந்தவரே தனது சரணாகதி நிலையில் இருந்து அந்த அன்பின் வெளிப்பாட்டால் இந்த அனைத்துசக்திக்கும் மூலமான அந்த சிவத்தை உணரமுடியும். மேலும் நாம் இந்த நிறத்தை எவ்வளவு தூரம் வரை சென்று பார்த்திருக்கின்றார்கள் என்றும் எவ்வளவு ஆழமாக பார்த்திருக்கின்றார்கள் என்பதை ஆதிசக்தியின் அருளால் எம் அறிவுக்குப்  புலப்படுத்தியத்தை பதிவு 10இல் பார்ப்போம்.

குண்டலினி தியானம். பதிவு 8



தயவு செய்து பதிவு 1ல் இருந்து படிக்கவும்.

கப தேகம் கொண்டவர்கள். இயற்கையாகவே சரியான செரிமானம் இல்லாமல் துன்பப்படுவதுண்டு, சோம்பல் குணமும் அதிக நித்திரையை உடையவர்களாக இருப்பார், உடல் எடை அதிகம் இருக்கும்.

ஆகவே இவர்கள் அதிகம் கொழுப்பு சத்தில்லாத, சூடான, குறைந்த அளவு உணவும், கசப்பு தன்மை உள்ள சாப்பாட்டை சாப்பிடுதல் நல்லது.இவர்கள் கடுக்காய் பாகற்காய் போன்றவற்றை உணவில் சேர்ப்பது மிகசிறந்தது .

 இப்படி கபம் அதிகமாக இருந்தால் நீங்கள் தியானத்தை சரியான முறையில் தொடரமுடியாம. சோர்வின் காரணத்தால் தூக்கத்தில் ஆழ்ந்து நித்திரைகொள்ள வேண்டிவரும். இது மேலும் செய்யும் செயலை தள்ளிப்போடும் மனநிலைக்கு கொண்டுசெல்லும். உங்களின் முயற்சிகள் வெற்றியடையாமல் தடைபட இது முக்கியகாரனமாகின்றது.

வாத பித்த கபம் சரியாக இருக்கும்போதே உங்களின் பஞ்சபூதங்களும் சீராக செயல்படும், அதன் மூலம் தச வாயுக்களும் ஒழுங்காக செயல்பட்டு அனைத்து நாலமுள்ள சுரப்பிகள் மற்றும் நாளமில்லா சுரப்பிகள் சிறப்பாக வேலைசெவதனால், சக்தி தளங்கள் (சக்கரங்கள்) தமக்கு தேவையான அதிகூடிய  சக்தியை பஞ்ச கோஷங்களின் துணையுடன் பிரபஞ்சத்தில் இருந்து பெற முயள்கின்றது .

நம்மில் பலர் இப்படியான கதைகளையெல்லாம் நாம் எப்படி நம்புவது என்று கேட்கலாம். முன்பு எந்த ஒரு தொழில்நுட்பமும் இல்லாத அந்த காலகட்டத்திலேயே நம் முன்னோர்கள் பல பொக்கிசங்களை தேடி கண்டுபிடித்து நம்மிடம் விட்டு சென்றுள்ளனர். 

உதாரணமாக: 

நாம் நம் உடலில் சக்திதலங்கள் உள்ளது என்றும் அதில் 7 சக்திதலங்களை அதி முக்கியமானது என்றும் அதன் நிறங்கள் பற்றியும் முன்பே பார்த்தோம்.

நீங்கள் வானவில் பார்த்திருப்பீர்கள் அதன் நிறங்கள் 7, இந்த நிறங்கள் நம் சாதாரண கண்களுக்கு சில நேரங்களில் மட்டும் தென்படுகின்றது.

 சரி இதற்கும் நம் சக்கரங்களுக்கும் எப்படி தொடர்பு என்பதை பதிவு 9இல் பார்ப்போம்.


திங்கள், 4 நவம்பர், 2013

முருங்கையின் மகத்துவம்


கீரை வகைகளில் இரும்புச் சத்து கணிசமாக உள்ளது. முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.
 வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய் இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை. இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம். 

முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங்களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம். முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். அதே வேளையில் சிறுநீரைப் பெருக்கும். 

முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த இ
லைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப் படும். தோல் வியாதிகள் நீங்கும். ஷமுருங்கைப் பட்டை, உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்த விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் இது நல்ல மருந்து. கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட மருந்து. முருங்கைக் காயை வேக வைத்து கொஞ்சம் உப்பு சேர்த்துச் சாப்பிடலாம். 

முருங்கைக் காய் சாம்பார் எல்லோருக்கும் பிடித்தமானதே. இந்த சாம்பார் சுவையானதாக மட்டும் இருந்து விடாமல் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கை காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்தி அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.

 முருங்கை விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம். இது மூளைக்கு நல்ல பலத்தை தரும். தாது விருத்தியை உண்டு பண்ணும். ஆனால் மலபந்தத்தைச் செய்வதில் முருங்கை விதைக்கு முதலிடம் தரலாம். முருங்கை மரத்திலிருந்து கிடைக்கும் பிசின் நல்ல டானிக்குகள் செய்ய பயன்படுகிறது. பச்சைப் பிசினை காதில் ஒரு சொட்டு விட்டால் போதும், காது வலி உடனே நின்று விடும். இந்த மரத்தின் வேர் மற்றும் பிசின் சம்பந்தப்பட்ட டானிக்குகளை அல்லது லேகியங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரை சீக்கிரம் வராமல் தள்ளிப்போகும்.

 மேலும் இந்தப் பூவுக்கு தாது விருத்தி செய்யும் குணம் உண்டு. முருங்கைப் பூ உஷ்ணத்தை உண்டு பண்ணக் கூடியதுதான் என்றாலும் அதனால் கெடுதல்கள் எதுவும் இல்லை. முருங்கைப் பிசினில் அரை லிட்டர் நீர் விட்டு புதுப் பாண்டத்தில் வைத்திருந்து காலையில் இரண்டு அவுன்ஸ் நீருடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் தாது கெட்டிப்படும். முருங்கை இலை சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு தந்தால், இரத்த சுத்தியும், எலும்புகளையும் வலுப்படுத்தும். இதில் கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம், அயன், வைட்டமின் உள்ளது. 

கர்ப்பப்பையின் மந்தத் தன்மையை போக்கி, பிரசவத்தை துரிதப்படுத்தும். இதன் இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும். ஆஸ்துமா, மார்சளி, சயம் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை சூப் நல்லது. 

முருங்கை இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும். முருங்கைகாய் இருதயத்தை வலுப்படுத்துவதுடன், இருதய நோய்களை போக்கி இரத்தவிருத்தி தாதுவிருத்தி செய்யும். முருங்கை இலை சாறுடன் தேனும், ஒரு கோப்பை இளநீரும் கலந்து பருக மஞ்சள்காமாலை, குடலில் ஏற்படும் திருகுவலி, வயிற்றுப்போக்கு கட்டுப்படும். விதையில் இருந்து என்னை தயாரித்து வாயுப்பிடிப்பு, மூட்டுவலிகளில் பயன்படுத்தலாம். முருங்கைவேரில் இருந்து சாறெடுத்து பாலுடன் சேர்த்துப் பருகிவர காசநோய், கீழ்வாயு, முதுகுவலி குணப்படும்.

நெல்லிக்காய்


நெல்லிக்காய் சாறு குடிப்பதால் என்ன நன்மை? உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் உணவுப் பொருட்களும், பழக்கவழக்கங்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

 குறிப்பாக உணவுப் பொருட்களில் காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவை பெரிதும் உதவியாக உள்ளன. அவற்றில் ஒன்று தான் நெல்லிக்காய். பொதுவாக நெல்லிக்காயில் வைட்டமின் சி அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது.நெல்லிக்காயில் மலை நெல்லிக்காய் என்ற ஒன்றும் உள்ளது. இது தான் உடலுக்கு மிகவும் சிறந்தது. அதனால் தான் ஆயுர்வேதத்தில் நெல்லிக்காயை அதிகம் பயன்படுத்துகின்றனர். 

மேலும் நெல்லிக்காயால் செய்யப்படும் ஜூஸானது சற்று துவர்ப்புடன் இருக்கும். துவர்ப்புடன் உள்ளது என்பதற்காக அதனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டாம். ஏனெனில் அதனை தினமும் உடலில் சேர்த்து வந்தால், அந்த நெல்லிக்காயின் உண்மையான பலனை நிச்சயம் உணர முடியும். இப்போது அந்த நெல்லிக்காய் ஜூஸை எப்படியெல்லாம் குடிக்க வேண்டும்.

 அவ்வாறு குடிப்பதால், உடலுக்கு என்ன நன்மையெல்லாம் கிடைக்கும் என்பதனைப் பார்ப்போமா!!! நீரிழிவு: நீரிழிவு நோயாளிகள், நெல்லிக்காய் சாற்றில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து குடித்தால், நல்லது. உடல் எடை: நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து உடல் எடையானது குறையும். 

ஆஸ்துமா: 
நெல்லிக்காய் ஜூஸில் சிறிது தேன் கலந்து, தினமும் இரண்டு முறை குடித்து வந்தால், ஆஸ்துமா குணமாகிவிடும். மலச்சிக்கல்: நெல்லிக்காய் குடலியக்கத்தை சீராக வைக்கும். எனவே இதனை தினமும் குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்துவிடலாம்.

 இரத்த சுத்திகரிப்பு: 
நல்ல ஃப்ரஷ்ஷான நெல்லிக்காய் சாற்றில் தேன் சேர்த்து குடிக்கும் போது, இரத்தமானது சுத்தமாகும். இதனால் நன்கு சுறுசுறுப்போடு உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

 சிறுநீர் எரிச்சல்: 
சிலருக்கு #சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும். அத்தகைய எரிச்சலைப் போக்குவதற்கு, தினமும் இரண்டு முறை நெல்லிக்காய் ஜூஸ் குடிக்க வேண்டும். 

உடல் #குளிர்ச்சி: 
கோடை காலத்தில் உடலானது அதிக வெப்பமாக இருக்கும். எனவே அத்தகைய உடல் வெப்பத்தை தணிப்பதற்கு நெல்லிக்காய் ஜூஸ் சிறந்ததாக இருக்கும். அதிகமான இரத்தப்போக்கு: மாதவிடாய் காலத்தில் அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்படும் போது, தினமும் மூன்று முறை சிறிது நெல்லிக்காய் ஜூஸையும், கனிந்த வாழைப்பழத்தையும் சாப்பிட்டால், சரிசெய்துவிடலாம். 

அழகான முகம்: 
முகம் நன்கு அழகாக பொலிவோடு இருப்பதற்கு, தினமும் காலையில் நெல்லிக்காய் சாற்றுடன், சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும்.

 இரத்தசோகை: 
உடலில் இரத்தம் குறைவினால் ஏற்படும் ஞாபக மறதியைத் தடுக்க, தினமும் நெல்லிக்காய் சாற்றை குடித்தால், இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகமாகி, ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.

 இதய நோய்: 
இதயம் பலவீனமாக இருப்பவர்கள், தினமும் நெல்லிக்காய் சாற்றை அளவாக குடித்து வந்தால், இதயத்தில் ஏற்படும் பிரச்சனையை சரிசெய்யலாம். 

சரும பிரச்சனைகள்:
 நெல்லிக்காய் ஜூஸ் சரும பிரச்சனைகளை குணப்படுத்துவதில் மிகவும் சிறந்தது. குறிப்பாக முகப்பரு, பிம்பிள் உள்ளவர்கள், அதனை குடித்தால் போக்கிவிடலாம். 

கண் பார்வை: 
நெல்லிக்காய் சாற்றைக் குடித்தால், கண் பார்வை அதிகரிக்கும். முதுமைத் தோற்றம்: #நெல்லிக்காய் சாறு உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, முதுமைத் தோற்றமானது விரைவில் வெளிப்படுவதை தடுக்கும்! 

என்றும் இளமைக்கு.






என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!

நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் 

ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே 

நோய் தோன்றுகிறது. உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், 

நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி 

செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார்.

ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா
ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் 

வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர். கடுக்காய்க்கு அமுதம் 

என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய 

அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி 

மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள். கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை 

யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது. 

கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட 

வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட 

உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை 

விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் 

பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும்.பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?

அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் 


தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம். கடுக்காய் அனைத்து 

நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் 

பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி 

ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த 

வாழ்க்கையைப் பெறலாம்.

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்: கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, 


சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், 

தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, 

தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல்,மூத்திரக் குழாய்களில் 

உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, 

பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் 

கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் 

கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் 

அருளிய அருமருந்தே கடுக்காய். இதை பற்றி சித்தர் கூறும் பாடல்...

"காலை இஞ்சி கடும்பகல் சுக்கு


மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்


விருத்தனும் பாலனாமே.-


காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து 


ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் 

பாடலின் கருத்தாம். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் 

நீங்கி இளமையோடு வாழலாம். கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய 

பொக்கிஷமாகும்.


சிவப்பு அரிசியின் சிறப்பு.



உங்கள் தட்டில் உணவா...விஷமா ? ஆயிரக்கணக்கான அரிசி வகைகள் உண்டென்று கடந்த தடவை கூறினேன். அவற்றில் மூன்று வகையான அரிசிகள் நிலைத்து நின்றன - சிவப்பு, கறுப்பு, வெள்ளை. இந்த வண்ண அரிசிகளைப் பற்றிய சுவாரசியமான பழங்கதைகள் உண்டு. இந்தோனேஷியாவின் பாலி தீவில் வழங்கும் கதை இது - கடவுள் சிவா (ciwa என்கிறார்கள் அங்கே. நம்ம ஊர் 'சிவன்’ -& sivan), ஒரு பறவையை பூமிக்கு அனுப்பினார். அந்தப் பறவை, நான்கு வகையான நெல் மணிகளைச் சுமந்து சென்றது. மஞ்சள், கறுப்பு, சிவப்பு, வெள்ளை. போகும் வழியில் மஞ்சள் அரிசியை அந்தப் பறவை தின்றுவிட்டது. மீதமுள்ள மூன்று வண்ண நெல் மட்டுமே மனிதனுக்கு கிடைத்ததாம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய யஜுர் வேதத்தில் மூவண்ண அரிசியின் மகிமை கூறப்படுகிறது. தெய்வங்களுக்குப் படைக்க வேண்டிய தானியங்களைப் பற்றிக் கூறும்போது, கறுப்பு அரிசியை அக்னி தேவனுக்கும், சிவப்பு அரிசியை மழைக் கடவுளான இந்திரனுக்கும், வெள்ளை அரிசியை சூர்யபகவானுக்கும் படைக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இப்போது நாம் பேசப்போவது... சிவப்பு அரிசியைப் பற்றி. சிவப்பு அரிசி ஓர் அற்புதமான அரிய உணவு. இதன் மருத்துவ விசேஷங்களைப் பற்றி கி.மு. 700-ல் சரகரும், கி.மு.400-ல் சுஸ்ருதரும் நிறையக் குறிப்பிட்டுள்ளார்கள். இவர்கள் இந்திய மருத்துவத்தில் ஆயுர்வேதத்தின் முன்னோடிகள். வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று நாடிகளில் ஏற்படும் மாற்றங்கள்தான் சகல நோய்களுக்கும் காரணம் என்பது ஆயுர்வேத சித்தாந்தம். இந்த மூன்று நாடிகளின் தோஷங்களையும் அறவே நீக்கும் ஆற்றல்... சிவப்பு அரிசிக்கு உண்டு என்று இவர்கள் கூறியுள்ளார்கள். சீனாவில் 3,000 ஆண்டுகளாக செந்நெல் பயிரிடப்படுகிறது. ஜப்பான், கொரியா, பிலிப்பைன்ஸ், இலங்கை, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் சிவப்பு நெல் பயிராகிறது. கொரியாவில் உள்ள சில புத்தர் சிலைகளின் உள்ளே சிவப்பு நெல் விதைகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மதுரை, திருநெல்வேலி, தஞ்சா வூர் போன்ற மருத நிலங்களில் செந்நெல் அமோகமாக விளைந்தது. 'மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று, ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென் மதுரை’ என்ற பழம் பாடலே இதற்கு சாட்சி. சிவப்பு நெல், விவசாய முறையில் மட்டுமின்றி தானாகவே காடுகளிலும் மலைகளிலும் மானாவாரியாக விளைந்தது. ஆகவே, இதை, 'காட்டு அரிசி’ (Wild Rice) என்று சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன. அதனால்தானோ என்னவோ, சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களே பெரும்பாலும் இதை உணவாகப் பயன்படுத்தினர். நம் நாட்டில் கர்நாடகா, பீகார், ஒடிசா, மத்தியப் பிரதேசம், வங்காளம் முதலிய மாநிலங்களில் இது பயிரிடப்பட்டாலும், கேரளாவில் இந்த அரிசி மிகவும் பிரசித்தம். இந்த அரிசிக்கு அவர்கள் கொடுத்துள்ள பெயர் - 'மட்ட அரிசி’. ஆனால், அவர்கள் இதை மிகவும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள் என்பதுதான் உண்மை. சபரிமலை செல்லும்போது அங்குள்ள ஹோட்டல்களில் சிவப்பு அரிசி சாதம் பரிமாறப்படும். என்னோடு வரும் நண்பர்கள் முகம் சுளித்து, ''வேண்டாம், வேண்டாம்... வொயிட் ரைஸ் போடு...'' என்று சொல்வதையும், பக்கத்து மேஜையில் அமர்ந்திருக்கும் கேரளவாசிகள் பச்சரிசி சாதம் பரிமாறப்பட்டால் முகம் சுளித்து, ''மட்ட அரிசி போடு...'' என்று சொல்வதையும் ஆண்டுதோறும் கண்டு வருகிறேன். இமாச்சல பிரதேசத்தில் குலு பள்ளத்தாக்கில் மட்டலி என்ற சிவப்பு நெல் பயிராகிறது. ஆங்கிலேய ஆட்சியில் அங்கிருந்த ஒரு கவர்னர் இந்த அரிசியை மிகவும் விரும்பி சாப்பிட்டதோடு, லண்டனில் உள்ள அவர் வீட்டுக்கு இந்த அரிசியைத் தவறாமல் அனுப்பி வந்தார் என்ற செய்திக் குறிப்புகள் உள்ளன. நீங்கள் யாரும் இதை இதுவரை சாப்பிடாவிட்டாலும், இப்போது நான் பட்டியலிடப்போகும் சிவப்பு அரிசியின் மருத்துவச் சிறப்புகள், உங்களை அதை நாட வைக்கும்! பொதுவாக நெல்லில் நான்கு பகுதிகள் உண்டு - வெளியே இருக்கும் உமி (Husk); உள்ளே இருக்கும் தவிடு (Bran), கரு (EMbryo); கடைசியாக வெகு உள்ளே இருக்கும் மாவுப்பொருள் (Starch). இவற்றுள் நல்ல சத்துக்கள் அனைத்தும் வெளிப்பகுதியிலும், வெறும் சக்கை மட்டும் உள்பகுதியிலும் இருக்கின்றன. நாம் சத்துப்பகுதியை மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுத்துவிட்டு, சக்கையை மட்டுமே சாப்பிடும் விநோதப் பிறவிகள்! சிவப்பு நெல் மட்டும் இந்த அமைப்பில் விசேஷமானது. இதன் சத்துக்கள் அனைத்தும் மாவுப்பகுதி வரை உட்சென்று சேமிக்கப்படுவதால், இது தீட்டப்பட்ட பின்பும் அதை நாம் பெற முடியும். மேலும் எந்த அரிசியிலும் இல்லாத அளவுக்கு பி-1, பி-3, பி-6 ஆகிய வைட்டமின்கள் - எந்த அரிசியிலும் காணமுடியாத அளவுக்கு இரும்புச் சத்து - ஜிங்க் (Zinc), மாங்கனீஸ், மெக்னீஷியம், செலினியம், பாஸ்பரஸ் போன்ற கனிமங்கள் - மிகுதியான நார்ச்சத்து (Fibre) என சிவப்பரிசியில் அடங்கியிருக்கின்றன. தன்னிடம் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் குணங்களால் இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகும் ஆன்த்தோசயனின், பாலிஃபீனால் போன்ற வேதிப்பொருட்களும் இதில் சங்கமித் திருக்கின்றன. இதையெல்லாம்விட, சிவப்பு அரிசியில் மானோகோலின் - கே (Monacolin K) என்கிற அற்புத வேதிப்பொருள் உள்ளது. இதைத்தான் மருத்துவத்துறையில் இப்போதும் 'லோவாஸ்டேடின்' (Lovastatin) என்ற பெயரில் ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதற்காக உலகெங்கும் கொடுத்து வருகிறோம். செந்நெல்லின் மீது வளரும் ஒரு வகை பூஞ்சணம்தான் (Yeast), இந்த லோவாஸ்டேடினை உற்பத்தி செய்கிறது. அதனால் சீனாவில், செந்நெல் மீது இந்த பூஞ்சணத்தை இவர்களாகவே வளர்க்கிறார்கள். 'சிவப்பு பூஞ்சண அரிசி' (Red yeast rice) என்று இதற்குப் பெயர். இதைத் தவிர, சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, ஈரல் வியாதிகள், பித்தப்பை கற்கள், ஆஸ்துமா மற்றும் பலவித ஒவ்வாமைக்கும் (Allergy) சிவப்பு அரிசி நல்ல மருந்து. இவ்வளவு பெருமைகள் வாய்ந்த சிவப்பு அரிசி... இப்போது காணாமல் போன மர்மம் என்ன? சிவப்பு நெல்லுக்கு உரம் இட்டாலும் சரி, இடாவிட்டாலும் சரி, பூச்சிக்கொல்லி மருந்துகள் எதுவுமே இல்லாமல், பூச்சிகளை அண்டவிடாமல் அமோகமாக வளரும் தன்மை உண்டு. ஆனால், ஆங்கிலேயர்கள், குறிப்பாக அமெரிக்கர்கள், பல சத்துகள் நிறைந்த இந்த அரிசியை களைப்பயிர் (Weed) என்றார்கள். சிவப்பு நெல்லை சிவப்பு அரக்கன் (Red Menace) என்றும், கொழுத்த பிச்சைக் காரர்கள் (Fat beggars) என்றும் அழைத்தார்கள். ஏன்..? ரசாயன உரங்கள் மூலமும், பூச்சிக்கொல்லி மருந்துகள் மூலமும், விவசாயத்துறையில் உலகெங்கும் ஒரு ராட்சத பொருளாதார சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ள அமெரிக்கர்களுக்கு, எந்த உரங்கள், பூச்சிக்கொல்லிகளின் தேவையும் இன்றி வளர்ந்த இந்த செந்நெல் பிடிக்கவில்லை. தங்கள் தொழிலை தக்கவைத்துக் கொள்ள இதை எப்படியாவது அழிக்க வேண்டும் என்றும், சிவப்பு நிறத்தை எப்படியாவது திட்டியே தீர்ப்பதென்றும் முடிவெடுத்தனர். 'பட்டை தீட்டப்பட்ட வெள்ளை அரிசி’ என்ற கவர்ச்சியை மக்களிடம் ஏற்படுத்தினர். நம் ஊர் மக்களும் வெள்ளை அரிசியின் நிறத்திலும், மணத்திலும் சுவையிலும் மயங்கி, சிவப்பு நெல் விவசாயத்தை 1930-க்குப் பிறகு பெருமளவில் கைவிட்டனர். தண்ணீர் அதிகம் தேவையில்லாத, உரம் தேவையில்லாத, பூச்சிக்கொல்லிகள் தேவையில்லாத, பல்வேறு அற்புத மருத்துவ குணங்களை உடைய, ருசியான, மலிவான சிவப்பு அரிசிக்கு நாம் ஏன் மாறக்கூடாது?! நன்றி : அவள் விகடன்