குண்டலினி தியானம். பதிவு 13
அன்பர்களே இதுவரை நாம் குண்டலினி தியானத்திற்கும் நம் பூஜை முறைகளுக்கும் நவக்கிரக வழிபாடுகளுக்கும், வானவில் தோற்றத்திற்கும், கிரகங்களுக்கும் உள்ள தொடர்பு பற்றி பார்த்தோம். இதை பற்றி தெரிந்துகொள்ளவேண்டிய அவசியம் என்ன என்று நீங்கள் நினைக்கலாம், நம்மில் பலர் நம் முன்னோர்கள் வகுத்த வழிபாட்டு முறைகளை அதன் தாத்பரியம் தெரியாமல் கேலிபேசுவதும், மூட நம்பிக்கை என்பதும் இப்போது ஒரு வகை பழக்கமாகிவிட்டது. இதை தவிர்க்கவே இந்த விளக்கம்.
இப்போது நாம் விடயத்துக்கு வருவோம்.
முதலில் ஒரு கட்டிடம் கட்டவேண்டும் என்றால் அதற்கு அத்திவாரம் மிகவும் வலிமையாக இருக்கவேண்டும். ஆனால் நாம் கட்ட இருப்பதோ மிகவும் சக்திவாய்ந்த ஆலயம். இந்த ஆலயம் சரியாக அமைய அத்திவாரம் சரியாக அமைத்து ஆலயமும் கோபுரமும் சரியாக அமைந்துவிட்டால், தெய்வம் ஓடி வந்து குடியேறும். அதற்கு முதலில் நாம் செய்யவேண்டியது.
நம் முன்னோர்கள் சொல்லும் ஒரு விடயம் உங்களுக்கு இப்பொது ஞாபகபடுத்துகின்றோம்.
1. ஒரு நாளைக்கு 2 முறை. மலம் கழிக்கவேண்டும்.
2.ஒரு வாரத்திற்கு 2 முறை எண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டும்
3.ஒரு மாதத்திற்கு 2 முறை. திருமணம் ஆனவர்கள் தாம்பத்தியத்தில் ஈடுபடவேண்டும். திருமணம் ஆகாதவர்கள் விந்து விரயம் செய்யக்கூடாது.
4. ஒரு வருடத்திற்கு 2 முறை. பேதி மருந்து குடித்து வயிற்ரை சுத்தம் செய்யவேண்டும்.
இதை முதலில் தொடங்கவேண்டும். பின் நம் உடலில் முத்தோஷம் எனப்படும் வாத பித்த கபத்தை சரி செய்யவேண்டும்.
இதை சரிபார்ப்பது எப்படி என்று பதிவு 6 மற்றும் 7 இல் கொடுத்துளோம். இங்கு சில படங்களுடன் சில விளக்கங்கள்.
நாடி பார்ப்பது ஆண்களுக்கு வலது கையிலும் பெண்களுக்கு இடது கையிலும் பார்க்கவும், பார்க்கும் முறை.
இப்படி பார்த்து உங்களின் தேகம் எவ்வகையான தேகம் என்பதை தெரிந்துகொண்டு, அதிகமாக உள்ளதை சமன் செய்யவேண்டும். அதற்கு நீங்கள் அடியேன் பதிவு 7,8இல் பார்க்கவும். மேலும் வாதம் பித்தம் கபம் இவற்றால் நம் உடலில் நோய்களை சரிசெய்வது எப்படி என்று பதிவு 14 இல் பார்ப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக