செவ்வாய், 4 மார்ச், 2014

குண்டலினி தியானம். பதிவு 16

அன்பர்கள் முதல் பதிவிலிருந்து வாசிப்பதே முழுமையான தெளிவைத்தரும்.
அனைத்து பதிவுகளையும் வாசிக்க :

http://blissfulllight.blogspot.ca/2013/10/blog-post_25.html

4. விஞ்ஞானமய கோசம்.

இது உணர்வுபூர்வமான அறிவு தெளிவின் மூலம் இயக்கப்படும் கோசம். அன்பு, பாசம், கருணை,மகிழ்ச்சி போன்ற நல்ல உணர்வுகளால் இந்த கோசம் வலுவடைவதுடன் சீராக இயங்குகின்றது.

இந்த கோசம். வெறுப்பு, கோபம், துக்கம், பயம், போரான்மை போன்ற எதிர்மறை உணர்வுகளால் வலுவிழந்து நோய்வாய் படுகின்றது.

இதை இப்போது உள்ள மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் பல ஆய்வுகளில் கண்டு வெளிபடுத்தி உள்ளனர்.உதாரணமாக.
மனதில் நீண்ட நாட்களாக தேக்கி வைத்திருக்கும் வெறுப்பே புற்றுநோயாக உருவெடுக்கின்றது. தீராத கோபம்,வெறுப்பு, குரோதம் ஆகியவையே புற்றுநோயாக உருவாகின்றது என்றும், இது தாயின் மூலம் குழந்தைகளுக்கும் வருவதாகவும் கூறுகின்றனர்.

நம் வாழ்வில் நாம் காட்டும் பரபரப்பு (டென்ஷன்) இரத்தகொதிப்பு,அல்சர்,ஆஸ்துமா, மாரடைப்பு போன்ற நோய் வருவதற்கு காரணமாகின்றது. 

இதை பக்தியின் மூலமும், தியானத்தின் மூலமும் மட்டுமே நாம் வலுவடைய செய்ய முடியும்.

 

5.ஆனந்தமய கோசம்.
இந்த கோசம் வலுவடையவேண்டுமானால், முதல் உள்ள நான்கு கோசங்களும் வலுவடையவேண்டும்.அப்படி வலுவடைந்து விழித்தெழும் போதே நாம் அதிமுகியமான் உன்னதமான நிலையை அடைகின்றோம்.இந்த ஆனந்தமய கோசம் வலுவடைந்து முழுமையடைவதையே வாழ்வின், நம் பிறப்பின் நோக்கம் என ஞானிகளும் ரிசிகளும் சித்தர்களும் கூறிவந்துள்ளனர். அதுவே இத்தனை பிறவிகளாக நாம் தேடும் முக்தி. அதாவது தெய்வத்தை உணர்தல். இந்நிலையில்  தொடர்ந்திருப்பவரே சம்பூர்ண ஜீவன்முக்தன்.

இந்த நான்கு கோசங்களும் வலுவடைந்தால் மட்டுமே 5 வது கோசம் வலுவடையும்.இந்த நான்கு கோசங்களும் வலுவடைய நாம் செய்யவேண்டியது.

1.அன்னமய கோசம்: உணவுக்கட்டுப்பாடு, யோகாசனம், உடற்பயிற்சி.

2:பிரணமய கோசம்: சுவாச பயிற்சி, நடனம்.

3.மனோமய கோசம்: புராண கதைகள்,பக்தி, பக்தி பாடல்கள்.

4.விஞ்ஞான மாய கோசம்: பக்தி, தியானம். 

இவை நான்கையும் ஒரு சேர மிக விரைவில் இயக்குவதே குண்டலினி தியானம். இதன் மூலம் 5 வதாகிய ஆனந்த மாய கோசத்தையும் தட்டி எழுப்பும் அற்புத சக்தி கொண்டதே குண்டலினி தியானம்.

இந்த ஐந்து உடல்களில் சிலவற்றை சராசரி மனிதர்களே நம் கண்களால் காணக்கூடியதாக உள்ளது. சில உடல்களை தியானத்தில் நல்ல நிலையை அடைந்தவர்கள் மட்டுமே பார்க்க முடிகின்றது. 
இந்த 5 உடல்களின் துணையுடன் இனைந்து நமக்கு இன்னும் சக்தி வாய்ந்த  9 உடல்கள் உள்ளன. ஆனால் இவற்றில் 7 உடல்களே பிரதானமாக பேசப்படுகின்றது. இவை சக்தி உடல் எனப்படுகின்றது.

பதிவு 17 இல் சக்தி உடல்கள் பற்றிய விளக்கத்தை பார்ப்போம்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக