தயவு செய்து பதிவு 1ல் இருந்து படிக்கவும்.
கப தேகம் கொண்டவர்கள். இயற்கையாகவே சரியான செரிமானம் இல்லாமல் துன்பப்படுவதுண்டு, சோம்பல் குணமும் அதிக நித்திரையை உடையவர்களாக இருப்பார், உடல் எடை அதிகம் இருக்கும்.
ஆகவே இவர்கள் அதிகம் கொழுப்பு சத்தில்லாத, சூடான, குறைந்த அளவு உணவும், கசப்பு தன்மை உள்ள சாப்பாட்டை சாப்பிடுதல் நல்லது.இவர்கள் கடுக்காய் பாகற்காய் போன்றவற்றை உணவில் சேர்ப்பது மிகசிறந்தது .
இப்படி கபம் அதிகமாக இருந்தால் நீங்கள் தியானத்தை சரியான முறையில் தொடரமுடியாம. சோர்வின் காரணத்தால் தூக்கத்தில் ஆழ்ந்து நித்திரைகொள்ள வேண்டிவரும். இது மேலும் செய்யும் செயலை தள்ளிப்போடும் மனநிலைக்கு கொண்டுசெல்லும். உங்களின் முயற்சிகள் வெற்றியடையாமல் தடைபட இது முக்கியகாரனமாகின்றது.
வாத பித்த கபம் சரியாக இருக்கும்போதே உங்களின் பஞ்சபூதங்களும் சீராக செயல்படும், அதன் மூலம் தச வாயுக்களும் ஒழுங்காக செயல்பட்டு அனைத்து நாலமுள்ள சுரப்பிகள் மற்றும் நாளமில்லா சுரப்பிகள் சிறப்பாக வேலைசெவதனால், சக்தி தளங்கள் (சக்கரங்கள்) தமக்கு தேவையான அதிகூடிய சக்தியை பஞ்ச கோஷங்களின் துணையுடன் பிரபஞ்சத்தில் இருந்து பெற முயள்கின்றது .
நம்மில் பலர் இப்படியான கதைகளையெல்லாம் நாம் எப்படி நம்புவது என்று கேட்கலாம். முன்பு எந்த ஒரு தொழில்நுட்பமும் இல்லாத அந்த காலகட்டத்திலேயே நம் முன்னோர்கள் பல பொக்கிசங்களை தேடி கண்டுபிடித்து நம்மிடம் விட்டு சென்றுள்ளனர்.
உதாரணமாக:
நாம் நம் உடலில் சக்திதலங்கள் உள்ளது என்றும் அதில் 7 சக்திதலங்களை அதி முக்கியமானது என்றும் அதன் நிறங்கள் பற்றியும் முன்பே பார்த்தோம்.
நீங்கள் வானவில் பார்த்திருப்பீர்கள் அதன் நிறங்கள் 7, இந்த நிறங்கள் நம் சாதாரண கண்களுக்கு சில நேரங்களில் மட்டும் தென்படுகின்றது.
சரி இதற்கும் நம் சக்கரங்களுக்கும் எப்படி தொடர்பு என்பதை பதிவு 9இல் பார்ப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக