வெள்ளி, 8 நவம்பர், 2013

குண்டலினி தியானம். பதிவு 10

குண்டலினி தியானம். பதிவு 10

தயவு செய்து பதிவு 1ல் இருந்து படிக்கவும்.

நம் உடலில் உள்ள சக்கரங்களின் நிறங்களுக்கும் வானவில்லின் நிறங்களுக்கும் தொடர்பு உள்ளதற்கு காரணம். இந்த அண்டவெளியில் இருக்கும் கிரகங்களே. அந்த கிரகங்களில் இருந்து வெளிப்படும் ஒளிக்கதிர்களே அண்டமெங்கும் பரவிக்கிடந்தது, அதன் ஆளுமையால் இங்கு உருவாகும் அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான் பிராணசக்தி, மின்காந்தசக்தி போன்றவற்றை கொடுக்கின்றது.

இந்த சக்தி ஓட்டத்தின் பயன்களை சரியாக புரிந்து அதை நாம் எப்படி உள்வாங்கி பலனடையவேண்டும் என்பதை, நம் மகான்கள் கண்டு அதற்கு பலவிதமான  வழிகளையும் யுக்திகளையும் கையாண்டு, மிக நுணுக்கமான விடயங்களை மறைமுகனாகவும் சிலவற்றை வெளிப்படையாகவும் செய்துள்ளனர்.

அவற்றில் சிலவற்றைப்பார்ப்போம்.

கோவில் வழிபாடு.
இது பல லட்சம் தத்துவங்களை உள்ளடக்கியது இப்போது  
சிலவற்றை மட்டும்  பாப்போம். அதில் நவக்கிரக வழிபாடு.

நாம் நம் கோவில்களில் உள்ள நவகிரகங்களின் வழிபாட்டின் போது அந்த கிரகாதிபதிகளுக்கு அணிவித்திருக்கும் ஆடைகளின் நிரத்தைபார்த்தால் தெரியும். நம் முனோர்கள் எவ்வளவு அறிவு தெளிவும், பூமியில் இருந்தே இந்த பிரபஞ்சத்தையும் அதன் அமைப்பையும் ஒரு கணப்பொழுதில் கணக்கிடும் ஆற்றல் பெற்றவர்கள் என்பது தெரியவரும்.

 


கிரகங்களின் நிறம் பார்ப்பதற்கு ஒரே நிறம் போல் தெரிந்தாலும் உண்மையில் அவை வெளியிடும் கதிர்கள் ஒவ்வொன்றும் நம் முனோர்கள் கோவில்களில் வைத்திருக்கும் விரகங்களுக்கு அணிவிக்கும் ஆடைகளின் நிரத்திளிருப்பதுதான் உண்மை. இது அந்த கிரகாதிபதிக்கு அணிவிக்கும் உடையில் மட்டும் முடிந்துவிடாமல். அந்த கிரகத்தின் கதிர்களை அந்தகோவிலில்  வந்து விழும்படி செய்வதற்கு ஒவ்வொருகிரகத்திற்கும் உரிய தானியம், இரத்தின கற்கள் , அதற்குரிய உலோகம், அதற்குரிய வடிவத்தை அந்துலோகத்தில் சரியாக பதிவுசெய்தல், அதற்குரிய மந்திரம் என்று மிகமிக நுட்பமாக பல லட்சம் விடயங்களை சேகரித்து அதனை வடிவமைத்து,மிக மிக சிறப்பாக செய்துள்ளனர்.

இதற்கு மிக சிறந்த சான்றே சமீபத்தில் அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் கூறியது அனைவரும் அறிந்ததே. 

சனிகிரகத்திலிருந்து  ஒரு மிக அடர்த்தியான நீலநிற கதிர் பூமியை நோக்கி வருவதையும், அது பூமியில் இந்தியாவில் உள்ள திருநள்ளாறு என்ற  மிகவும் பிரசித்திபெற்ற சனீஸ்வரனின் ஆலயத்தில் வந்து விழுவதாகவும் சொல்லி, இது எப்படி சாத்தியம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இப்பொழுது அவர்கள் கண்டு வியக்கும் இந்த அற்புதமான விடயத்தை நம் ஞானிகள் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே கண்டுபிடித்து அதில் பாண்டித்தியம் பெற்று விளங்குகின்றனர்.
ஆனால் நம்மில் பலர் நம் கோவில் வழிபாடு முறைகளை சிறிதும் அதன் மகத்துவம் தெரியாமல் தவறாக பேசுகின்றனர். 

ஆனால் நம் ஆலயங்களில் நடத்தப்படும் ஒவ்வொரு பூஜைக்கும் சம்பிரதாயத்திற்கும் பல லட்சம் காரணங்களும் பலன்களும் உண்டு. உண்மையை அறிவ விரும்புபவர்கள் தேடினால் கட்டாயம் கிடைக்கும். கிடைக்கின்றது.

அடுத்து நம் அம்மன் கோவில்களில் நடக்கும் பௌர்ணமி பூசை அல்லது ஸ்ரீ சக்கரபூசை பற்றி பதிவு 11 இல்  மேலோட்டமாக பார்ப்போம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக