குண்டலினி தியானம். பதிவு 19
அன்பர்கள் முதல் பதிவிலிருந்து வாசிப்பதே முழுமையான தெளிவைத்தரும். முதல் பதிவில் இருந்து வசிப்பதற்கு:
இப்பொது நாம் இந்த ஆதிசக்தியாகிய குண்டலினி சக்தி நம் உடலில் எங்கு உள்ளது என்று பார்ப்போம். இந்த சக்தி நம் உடலில் நம் முதுகெலும்பின் நுனியில் ஒரு முக்கோணம் போன்ற ஒரு அமைப்பு உள்ளது. இந்த பக்குதியில் தான் குண்டலினி சக்தி ஒரு பாம்பின் ரூபத்தில் சுருண்டு படுத்திருப்பது போல் இருக்கின்றாள். நம் முன்னோர்கள் நம் உடலில் இருக்கும் இந்த சக்தியை ஒரு பெண் தெய்வமாக அதாவது நாம் வணங்கும் சக்தியாக குறிப்பிடுகின்றனர். இந்த பிரபஞ்சத்தில் இருந்து நம் உடலுக்குள் நுழையும் சக்தியை ஆண் தெய்வமாகவும் அதாவது எம்பெருமான் சிவமாகவும் வர்ணிக்கின்றனர். இந்த சக்தியின் உதவியுடன் நம் உடலை ஆலயமாகி அதன் மூலம் சிவத்தை உள்ளும் புறமும் உணரும் போதே ஒருவன் முக்தன் ஆகின்றான். எங்கும் எதிலும் இந்த இரண்டு சக்தியும் கலந்திருப்பதை எப்பொழுதும் உணர்பவனே சம்பூர்ண ஜீவன் முக்தனாகின்றான்.
இந்த ஆதி சக்தியாகிய குண்டலினி சக்தியே தானும் சூக்சுமமாக தானும் இருந்து கொண்டு நம் உடலிலும் இந்த சூக்சும சக்கரங்களை உருவாக்குகின்றால். இப்படி உருவாக்கும் போது,
தான் இருக்கும் இடத்திலிருந்து வெளிப்பட்டு முதல் சக்கரமாகிய மூலாதாரத்திற்கு இடமிருந்து வலமாக மேல் நோக்கி செல்கின்றாள் இப்படி செல்லும் போது இந்த மூலாதாரசக்கரம் இடமிருந்து வலமாக சுழல்கின்றது. இப்படி மூலாதாரம் வலப்புறம் (clock wise )சுற்றும் அமைப்புள்ள உடலே ஆண் சிசுவாக பிறக்கின்றது.
இந்த ஆண் குழந்தையின் ஒவ்வொரு சக்கரங்களும் எவ்வாறு சுழல்கின்றன என பார்ப்போம்.
மூலாதாரம் வலப்புறம் சுழல்கின்றது.
சுவாதிஷ்டானம் இடப்புறம்
மணிப்பூரகம் வலப்புறம்
அணாகதம் இடப்புறம்
விசுக்தி வலப்புறம்
ஆக்ஞேயம் இடப்புறம்
சஹஸ்ராரம் வலப்புறம்.
சக்தியானவள் தன் இடத்தில் இருந்து மூலாதாரத்திற்கு வலப்புறமாக மேல் எழும்பி இடப்புறமாக திரும்மி மேல்நோக்கி செல்வாலேயானால் இந்த அமைப்பு கொண்ட சிசு பெண் குழந்தையாக பிறக்கின்றது.
மூலாதாரம் இடப்புறம் சுழல்கின்றது.
சுவாதிஷ்டானம் வலப்புறம்
மணிப்பூரகம் இடப்புறம்
அணாகதம் வலப்புறம்
விசுக்தி இடப்புறம்
ஆக்ஞேயம் வலப்புறம்
சஹஸ்ராரம் இடப்புறம்.
நீங்கள் குண்டலினி சக்தியாகிய தாய் ஒரு பாம்பின் ரூபத்தில் கீழிருந்து மேல் நோக்கி இப்படி ஒவ்வொரு சக்கரத்திற்கும் இடையில் வளைந்து வளைந்து செல்லும்போது இந்த சக்கரங்கள் நன்றாக சுழன்று வலிமை பெறுகின்றன.
இப்படி மூலாதாரத்தை சுழல செய்யும் முன் , பூர்வ ஜென்மபலனால் தடை ஏற்பட்டு பின் வலப்புறம் சுழல வேண்டிய மூலாதாரம் இடப்புறம் சுழலுமேயானால் அது ஆணின் குணமும் உடலும் கொண்ட பெண்ணாகவும்.
இடப்புறம் சுழலவேண்டிய மூலாதாரம் தடை ஏற்பட்டு வலப்புறம் சுழலுமேயானால் அந்த சிசு பெண்ணின் குணமும் உடலம்மைப்பும் கொண்ட ஆணாகவும் பிறக்கின்றது.
இப்படி உருவாக்கி விட்டு மீண்டும் தன இருப்பிடத்திற்கு வந்து ஓயவெடுக்கின்றால். இப்படி ஓய்வெடுப்பதற்கு முன் அனைத்து சக்கரங்கலிடமும் தன்னை எழுப்பவேண்டாம் எனவும், மிக அவசியம் என்றால் நானே எழுந்து வந்து உதவுவேன் என்று சொல்லிவிட்டு செல்கின்றாள்.
இதில் மூலாதாரத்தின் அதிபதியாகிய மஹா கணேசரே முதன்மை காவலாக இருக்கின்றார். நம் வாழ்வில் எந்த ஒரு செயலையும் வெற்றியுடன் செய்ய நாம் தடைகளை நீக்க கூறி விநாயகரையே வணங்குகின்றோம். அதை போலவே ஆன்மீகத்தில் மற்றும் இந்த குண்டலினி தியானத்தில் முழு முதல் கடவுளாக விநாயகரையே வணங்கி தொடங்கவேண்டும். ஆம் மூல பொருள் மூலாதாரத்தில் வீற்றிருக்கும் நம் கணபதியே தாயாகிய சக்தியின் ஆணைப்படி சிவமே வந்த போதும் தாயை பார்க்க விடாமல் தடுத்து காவல் புரிபவர்.
அடியேன் இந்த தொடரை சுருக்கமாக எழுதவே முயற்சிக்கின்றோம். ஆனால் எதை தொடங்கினாலும் அதில் உள்ள முக்கியத்துவமும் மேன்மையும் விருட்சம் போல் வளர்ந்துகொண்டே செல்கின்றது. இருப்பினும் எம்மால் முடிந்த அளவு சுருக்கமாக எழுத முயற்சிக்கின்றோம்.
இனி நாம் பதிவு 20 தில் மற்ற இரு நாடிகளாகிய இடகலை மற்றும் பிங்கலை பற்றி பார்ப்போம்.














